புவனேஷ்வர்: ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா நேற்று முன்தினம் போராடித் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி சார்பில் குட்பீல்டு டேவிட் 25வது நிமிடத்தில் ஒரு கோலும் வார்டு சேம் 43 வது நிமிடத்தில் ஒரு கோலும் போட்டனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. மனந்தளராமல் விளை யாடிய இந்தியா, இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியைத் தந்தது. ஆகாஷ் தீப் 47வது நிமிடத்திலும் ரூபிந்தர்பால் சிங் 50வது நிமிடத்திலும் கோல்கள் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தனர். ஆனால் ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது இங்கிலாந்து வீரர் வார்டு சேம் 57வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார். இங்கிலாந்து அணி 3-2 எனும் கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி
1 mins read

