புதுடெல்லி: இந்தியா = இலங்கை இடையிலான மூன் றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி புதுடெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. பூவா தலையாவில் வென்று பந்தடிப்பைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அணித் தலைவர் விராத் கோஹ்லி 156 ஓட்டங்களுடனும் ரோகித் சர்மா ஓர் ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. விராத் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இரட்டைச் சதம் அடித்துக் கொண்டாடும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

