புதுடெல்லி: இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் சந்திமாலும் மேத்யூசும் சதம் விளாசிய போதும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடி யாத மற்ற வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்தனர். இவ்வணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 7 விக் கெட்டுகள் இழப்பிற்கு 536 ஓட் டங்களை எடுத்த இந்திய அணி ஆட்டத்தை முடித்துக் கொள் வதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணிக்காக நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது தினேஷ் சந்திமால், மேத் யூஸ் தொடர்ந்து விளையாடினர். சந்திமால் புகைமூட்டம் கார ணமாக பந்தடிக்க சிரமப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து விளையாடிய அவரும் மேத்யூசும் சதம் விளாசினர். மேத்யூஸ் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசியுள்ளார்.
இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் (வலது) 147 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். படம்: ஏஎஃப்பி

