ஆஸ்திரேலியாவை சிதறடித்த இங்கிலாந்து நிதான ஆட்டம்

ஆஸ்திரேலியாவை சிதறடித்த இங்கிலாந்து நிதான ஆட்டம்

1 mins read

அடிலெய்ட்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன் னிங்சில் ஆஸ்திரேலியாவை மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டி யது இங்கிலாந்து. முதல் இன்னிங்சில் 442 ஓட்டங்களை எடுத்தது ஆஸ்தி ரேலியா. ஆனால் இங்கிலாந்து அணியால் 227 ஓட்டங்கள் எடுத்து 'ஃபாலோ ஆனை' மட்டுமே தவிர்க்க முடிந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 53 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து நேற்றைய நான் காவது நாள் ஆட்டத்தில் 138 ஓட் டங்களுக்கு ஆஸ்திரேலியாவைச் சுருட்டியது இங்கிலாந்து.