எஸ்- லீக் நிதி 20% குறையலாம்

எஸ்- லீக் நிதி 20% குறையலாம்

1 mins read

எஸ் லீக் காற்பந்துக் குழுக் களுக்கான நிதி 20 விழுக்காடு குறையலாம் என்று கூறப்படு கிறது. இக்குழுக்கள் ஒவ்வோர் ஆண்டும் 16 மில்லியன் வெள்ளி நிதி பெற்று வந்தன. ஆனால் அடுத்த ஆண்டு அவை சுமார் 50 விழுக்காடு குறையும் என்று அஞ்சப்பட்ட நிலையில், தற்போது 20 விழுக் காடு மட்டுமே குறையலாம் என்று தெரிவதாக 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவிக்கிறது. அதாவது எஸ் லீக் குழுக்கள் அடுத்தாண்டு சுமார் 13 மில்லி யன் வெள்ளி நிதி பெறக்கூடும். மேலும் வெளிநாட்டு விளை யாட்டாளர்களின் எண்ணிக் கையை நான்கில் இருந்து இரண் டாகக் குறைக்கவும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.