சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

1 mins read
3f792f65-3846-40b0-b35a-c5417566398f
-

உக்ரேன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் தற் போதைய பருவத்தில் முன்னிலை யில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு சாம்பியன்ஸ் •லீக் போட்டியில் முற்றுப்புள்ளி வைத்தது ஷாக்டர் டோன்ட்ஸ்க். சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று அதிகாலை நடந்த போட்டி யின் 26வது நிமிடத்தில் பெர்னாட் புகுத்திய கோலால் முன்னிலை பெற்ற ஷாக்டர் டோன்ட்ஸ்க் 32வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலைப் போட்டு வலுவான நிலையை எட்டியது. ஏற்கெனவே சாம்பியன்ஸ் லீக் கின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட சிட்டி, இப்போட்டியில் அகுவேரோ, ஜிசஸைத் தவிர வேறு முன்னணி ஆட்டக்காரர் களைக் களமிறக்கவில்லை. இதனால் ஆட்ட நேரத்தில் சிட்டி குழுவால் ஒரு கோல்கூட போட முடியவில்லை. ஆனால் கூடுதல் நேரத்தின் போது எதிரணியின் தப்பாட்டம் காரணமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி மான் செஸ்டர் சிட்டி யின் செர்ஜியோ அகுவேரோ ஒரு கோல் போட்டார்.

ஷாக்டர் டோனட்ஸ்க் குழுவிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஒரே கோலைப் போட்டார் செர்ஜியோ அகுவேரா. படம்: ராய்ட்டர்ஸ்