புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி களக்காப்பில் முன்னேறி இருந்தாலும் எதிரணி விக்கெட்டு களை வீழ்த்தும் 'கேட்சு'களைத் கோட்டைவிடுவது என்பது அதன் வழக்கமாகிவிட்டது. இந்தியா=இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றிருந்தாலும் கடைசி போட்டியை வெல்ல முடியாமல் போனதற்கு காரணம் கேட்சுகளைத் தவறவிட்டதுதான். அதிலும் இலங்கை வீரர் மேத்யூஸ் கொடுத்த இரண்டு கேட்சுகளை நழுவவிட்டது பெரும் தவறாக போய்விட்டது. டெல்லியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன் னிங்சில் இலங்கை அணியின் மேத்யூஸ் 111 ஓட்டங்களை எடுத்தார். மேத்யூஸ் ஆறு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, அவர் கொடுத்த கேட்சை இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி நழுவவிட்டார். மீண்டும் மேத்யூஸை (98 ஓட்டங்கள்) ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த வாய்ப்பை ரோகித் சர்மாவும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
பந்தடிப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் விக்கெட்டைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய விக்கெட் காப்பாளர் விருத்திமான் சாகாவும் (இடது) புஜாராவும் (வலது). படம்: ஏஎஃப்பி

