பாரிஸ்: சிறந்த காற்பந்து விளை யாட்டாளருக்கான விருதை ஐந் தாவது முறையாக வென்றுள்ளார் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ் டியானோ ரொனால்டோ. பிரான்ஸ் காற்பந்து பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் 'பலோன் டி'ஆர்' விருது சிறந்த காற்பந்து விளையாட்டாளருக்கு வழங்கப் பட்டு வருகிறது. இந்த விருதுக்கான வீரர் பத் திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவார். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உட்பட 30 பேர் இடம் பெற்றிருந்தனர்.
கடந்த ஆண்டைப் போலவை இந்த ஆண்டும் மெஸ்சியை முந் திய ரொனால்டோ ஐந்தாவது முறையாக இந்த விருதை தட்டிச் சென்றார். கடந்த பருவத்தில் ரியால் மட்ரிட் குழு லா லீகா, சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வெல்ல ரொனால்டோவின் ஆட்டம் முக் கிய காரணமாக அமைந்தது. பிரான்ஸ் தலைநகரான பாரி சில் நடைபெற்ற விழாவில் ரொனால்டோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் ஐந்தாவது முறையாக இந்த விருதை வென்ற ரொனால்டோ மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார். 32 வயது ரொனால்டோ இந்த விருதை 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஏற் கெனவே வென்றுள்ளார்.

