லண்டன்: வெஸ்ட் ஹேம் காற் பந்துக் குழுவின் நிர்வாகியாக முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளார் அதன் நிர்வாகி டேவிட் மோயஸ். செல்சிக்கு எதிரான இங்கி லிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் இன்றிரவு மோதவுள்ளது வெஸ்ட் ஹேம். இதில் செல்சியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய மோயஸ் கடுமையாக போராட வேண்டியிருக்கும். கடந்த ஞாயிறு அன்று சிட்டி குழுவிடம் தோற்ற வெஸ்ட் ஹேம், அதற்கு முன் தனது சொந்த மண்ணில் நடந்த லெஸ் டர் குழுவிற்கு எதிரான ஆட் டத்தை 1=1 என சமன் செய்தது. செல்சிக்கு எதிரான இன் றைய ஆட்டமும் வெஸ்ட் ஹேமின் சொந்த மண்ணில் நடைபெறும் நிலையில், அக்குழு விற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் காயத்தில் இருந்தது குணமடைந்து வரும் ஜாவியர் ஹெர்னாண்டஸ் களமிறக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய பருவத்தில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 13 கோல்களைப் போட்டு உள்ளார். வெஸ்ட் ஹேமை போலவே செல்சியும் இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாகப் போராடும். ஏனெனில் 11 புள்ளிகள் முன் னிலையில் உள்ள சிட்டியுடனான இடைவெளியை குறைக்க வேண் டுமானால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது செல் சிக்கு அவசியமாகும்.

