சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் மது மோகனா மலேசிய சூப்பர் லீக்கில் போட்டியிடும் நெகிரி செம்பிலானுடன் இணைந் துள்ளார். எஸ்=லீக் காற்பந்துப் போட்டி யில் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு வுக்காக விளையாடி வந்த 26 வயது மது மோகனாவை நெகிரி செம்பிலான் குழு ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. நெகிரி செம்பிலான் அவருக்குக் கூடுதல் சம்பளம் வழங்குகிறது என்றும் அவருக்கு வீடும் காரும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெகிரியின் துவான்கு அப்துல் ரஹ்மான் விளையாட் டரங்கத்தில் 45,000 ரசிகர் களுக்கு முன் விளையாடும் வாய்ப்பு மது மோகனாவுக்குக் கிடைத்துள்ளது.
நெகிரி செம்பிலானுக்காகக் களமிறங்க இருக்கும் மது மோகனா (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

