புவனேஸ்வர்: அனைத்துலக ஹாக்கி தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா தவறிவிட்டது. ஒடிசாவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா வுடன் இந்தியா மோதியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் கொன்சாலோ பெய்லாட் கோல் போட்டார். முன்னிலைக்குச் சென்ற அர்ஜெண்டினாவை விரட்டிப் பிடிக்க இந்தியா படாத பாடுபட்டது. ஆட்டத்தைச் சமன் செய்ய இந்திய வீரர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்திய வீரர்கள் வலை நோக்கி பந்தை அர்ஜெண்டினா ஆட்டக் காரர்கள் தடுத்து நிறுத்தினர். அதே நேரத்தில் இந்திய வீரர் களும் அர்ஜெண்டினா வீரர்களைக் கோல் போடவிடாமல் தடுத்தனர். இறுதியில் அர்ஜெண்டினா 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களைக் கடந்து செல்ல முயற்சி செய்யும் அர்ஜெண்டினாவின் மத்தாயஸ் பராடேஸ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

