சிட்டியின் 'பித்தலாட்டம்'; மொரின்யோ காட்டம்

சிட்டியின் 'பித்தலாட்டம்'; மொரின்யோ காட்டம்

1 mins read
f4954b79-394f-4855-8e9a-378f99537aee
-

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான் செஸ்டர் சிட்டிக்கும் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் இடையே சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 12.30 மணிக்குப் பலப்பரிட்சை நடைபெறுகிறது. இந்த ஆட்டம் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங் கத்தில் நடைபெறுகிறது. லீக் பட்டியலில் சிட்டி முன்னிலை வகிக்கிறது. யுனை டெட் இரண்டாவது இடத்தில் உள்ளது. யுனைடெட் குழுவைவிட சிட்டி கூடுதலாக எட்டு புள்ளி களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சிட்டியின் வீரர் களை மொரின்யோ குறை கூறி இருக்கிறார். எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் இருக்கும்போது பெனால்டி பெறும் நோக்குடன் அவர்கள் வேண்டுமென்றே கீழே விழுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். "சிட்டி ஒரு வலிமைமிக்க குழு. பந்தின் கட்டுப்பாட்டை எதிரணி யிடம் இழந்தால் அதைத் திரும்பப் பெற உடனடியாக மும்முரம் காட்டுவர். "தாக்குதலில் சிறப்பாக செயல் படுகின்றனர். விளையாட்டில் புத்தாக்கத் திறனைக் காட்டு கின்றனர்.

சிட்டியின் நிர்வாகியான பெப் கார்டியோலா (இடது), யுனைடெட் நிர்வாகி மொரின்யோவுக்கு (வலது) இடையே இன்று வியூகப் போர் நடைபெறுவது உறுதி. படம்: ஏஎப்பி