புதுடெல்லி: உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. இதில் 200 மீட்டர் மெட்லெ நீச்சலில் எஸ்=11 பிரிவில் கலந்துகொண்ட கண்பார்வை யற்ற இந்திய வீராங்கனையான காஞ்சனமாலா பாண்டே தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக பாரா நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங் கனை என்ற சாதனையை படைத்துள் ளார். தமது வெற்றி குறித்து காஞ் சனாமாலா கூறும்போது, ‚"உலக சாம்பியன்ஷிப் தொடருக்காக சிறந்த முறையில் தயாராகி இருந்தேன்.
"இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் முத லிடத்தைக் கைப்பற்றி தங்கப் பதக் கத்தை வென்றது ஆச்சரியமாக இருக்கிறது. "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அதை எப்படி வார்த்தைகளால் விவரிப் பது என்பது தெரியவில்லை," என்றார். கடந்த ஜூலை மாதம் காஞ்சனா மாலா ஜெர்மனியில் நடைபெற்ற பாரா நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார். இந்தத் தொடரில் கலந்துகொள்வதற்கு காஞ்சனாமாலாவுக்கு மத்திய விளை யாட்டுத்துறை அமைச்சகத்தின் சார் பில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
முதல் தங்கப் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியில் காஞ்சனமாலா. பார்வை யற்ற நிலைமையிலும் வெளிநாட்டில் கைவிடப்பட்ட நேரத்திலும் மனம் தளராது போராடிய இவரை ஊடகங்கள் போற்றிப் புகழ்கின்றன. படம்: இந்திய ஊடகம்

