தரம்சாலா: இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் 112 ஓட்டங் களில் இந்திய அணி படுமோச மாக சுருண்டது. எளிய இலக்கைத் துரத்திய இலங்கை 20.4 ஓவரிலேயே வெற்றி பெற் றது. பூவா தலையா வென்ற இலங்கை அணித் தலைவர் திசாரா பெரேரா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவானும், இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மாவும் ஆடத் தொடங்கினர். தொடக்கம் முதலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேத் யூஸ் வீசிய இரண்டாவது ஓவ ரில் மூன்றாவது நடுவரின் உத வியுடன் தவானை வெளியேற் றியது இலங்கை. தவான் ஓட்டக் கணக்கைத் துவங்கா மலேயே ஆட்டமிழக்க, ரோகித் ஷர்மா 2 ஓட்டங்களில் வெளி யேறினார். அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளைச் சந் தித்து ஓட்டம் எதுவும் எடுக் காமல் மோசமான சாதனையுடன் வெளியேறினார். அதிக பந்து களைச் சந்தித்து ஓட்டக் கணக் கைத் தொடங்காமல் வெளி யேறிய இந்தியர் என்ற 'சாதனை'யை அவர் படைத்தார்.
வெற்றியைக் கொண்டாடும் இலங்கை வீரர்கள். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மால் 10 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்கைளை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது ஆட்டத்தின் திருப்புமுனை. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலையில் உள்ளது. படம்: ஏஎஃப்பி

