வாய்ப்புகளை வீணடித்த செல்சி நட்சத்திரங்கள்

வாய்ப்புகளை வீணடித்த செல்சி நட்சத்திரங்கள்

1 mins read
4499e1a2-7a09-4adc-b48a-c19bb060e8d1
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் நேற்று அதிகாலை வெஸ்ட் ஹேம் குழு செல்சியை அதிரவைத்தது. பிரி மியர் லீக் தரவரிசைப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் இருக்கும் வெஸ்ட் ஹேம் குழு புதிய நிர்வாகியான டேவிட் மோ யசின் கீழ் புத்துணர்ச்சி பெற்று வருகிறது. சென்ற வாரம் பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியுடனான போட்டியில் சிட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என்றே இறுதியில் 2-=1 என்ற கோல் எண்ணிக் கையில் வென்றதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

சிட்டி குழுவுக்கு கொடுத்த அதிர்ச்சி ஒன்றும் புதிதல்ல இனி இப்படித்தான் முனைப்புடன் ஆடுவோம் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது முன்னணிக் குழுக்களில் ஒன்றான செல் சியை நேற்று முன்தினம் வெஸ்ட் ஹேம் பதம் பார்த்தது. ஆட்டம் தொடங்கிய ஆறா வது நிமிடத்திலேயே வெஸ்ட் ஹேமின் மார்க்கோ அர்னு டோவிச் கோல் போட்டு ரசிகர் களை பரவசப்படுத்தினார். மானுவேல் லசினி என்ற சகவீரருடன் பந்தை தட்டிச் சென்ற அர்னுடோவிச் பந்தை செல்சி கோல்காப்பாளர் கை களுக்கு எட்டாத வகையில் பந்தை உதைத்து கோல் போட் டார். அதன் பின்னர் செல்சி குழு எவ்வளவோ முயன்றும் அதனால் வெஸ்ட் ஹேம் குழு வின் தற்காப்பு அரணைத் தகர்க்க முடியவில்லை.

வாய்ப்பைத் தனதாக்கிக்கொள்ளும் வேகத்தில் மேலும் கீழுமாக நியூகாசல் யுனைடெட்டின் மைக்கல் மெரினோவும் லெஸ்டர் சிட்டியின் -ஜேமி வார்டியும். படம்: ராய்ட்டர்ஸ்