பார்சிலோனா முன்னிலை

பார்சிலோனா முன்னிலை

1 mins read

ஸ்பெயின்: லா லீகா காற்பந்துத் தொடரில் வில்லாரியல் குழுவை வீழ்த்திய பார்சிலோனா மீண்டும் ஐந்து புள்ளிகள் முன்னிலையில் பட்டியலில் முதலிடத்தில் உள் ளது. தப்பாட்டம் காரணமாக 60வது நிமிடத்தில் வில்லாரியல் குழுவின் ரபசேடா சிவப்பு அட்டை காண் பிக்கப்பட்டு ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார். அந்த நிமிடம் வரை இரு குழுக்களுமே கோல் எதுவும் போடவில்லை. அதன் பிறகு மெஸ்ஸியும் சுவாரெசும் தலா ஒரு கோலைப் போட 2-0 என வெற்றி பெற்றது பார்சிலோனா. இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடிய பார்சிலோனா 12வது வெற்றியைப் பதிவு செய்தது. இன்னோர் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் ரியால் பெட்டிஸ் குழுவைத் தோற்கடித்தது.