ஓல்ட் டிராஃபோர்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் ஆட்டமொன்றில் மேன்யூவை வீழ்த்தி 11 புள்ளிகள் முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி. வெற்றியாளர் பட்டத்தை நெருங்கிச் செல்லும் சிட்டி குழு வின் விளையாட்டாளர்கள் தங்க ளது வெற்றியைக் சற்று உரக்க மான இசையுடன் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். சிட்டி வீரர்களின் சற்று அதிகப் படியான கொண்டாட்டத்தைக் கண்டிக்க அவர்களை நோக்கி சென்றார் மேன்யூ நிர்வாகி மொரின்யோ. அப்போது சிட்டியின் கோல் காப்பாளர் எடர்சனுக்கும் மொரின்யோவிற்கு இடையே மூண்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பானது. அப்போது மொரின்யோ மீது தண்ணீரும் பாலும் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது தலையில் பிளாஸ்டிக் போத்தல் எறியப்பட்டதாகவும் சொல்லப்படு கிறது.
மான்செஸ்டர் சிட்டியின் டேவிட் சில்வா தனது குழுவின் முதல் கோலைப் போடுகிறார். இபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக 14 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்த ஒரே குழு என்ற பெருமையை சிட்டி பெற்றுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

