சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரில் காலிறுதிக்கு முந் தைய 'நாக்-அவுட்' சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 'நாக்=அவுட்' சுற்றில் எந்த எந்த குழுக்கள் மோதுகின்றன என்பதற்கான குலுக்கலின் முடி வில் அட்டவணை வெளியானது. 16 அணிகள் மோதும் இச் சுற்றின் ஒரு போட்டியில் பார்சி லோனா-, செல்சி குழுவை எதிர் கொள்கிறது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா காலிறுதிக்கு முன் னேற செல்சி கடும் சவாலாக இருக்கும். இக்குழுக்கள் மோதும் போட் டியின் முதல் சுற்று பிப்ரவரி 20ஆம் தேதியும் 2வது சுற்று மார்ச் 14ஆம் தேதியும் நடக்கிறது. ரியால் மாட்ரிட், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் குழுக்கள் மோதும் போட்டிகள் பிப்ரவரி 14, மார்ச் 6ஆம் தேதியும் நடக்கிறது. மற்ற போட்டிகளில் யுவென் டஸ்=டோட்டன்ஹாம், பசேல்- மான்செஸ்டர் சிட்டி, போர்ட்டோ- லிவர்பூல், செவ்வியா- மான் செஸ்டர் யுனைடெட், ஷக்தார்- ரோமா, பயர்ன் மியூனிக் -பெசிக் டாஸ் பலப்பரிட்சை நடத்துகின் றன.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: பார்சிலோனா - செல்சி மோதல்
1 mins read

