லுகாகுவை நம்பி இருக்கும் மொரின்யோ

லுகாகுவை நம்பி இருக்கும் மொரின்யோ

1 mins read

மான்செஸ்டர்: சிட்டி குழுவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு நாளை அதிகாலை நடைபெறவுள்ள இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் போர்ன்மத் குழுவை எதிர்கொள்கிறது மான்செஸ்டர் யுனைடெட். மூன்று ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்ட போக்பா இல்லாத தால்தான் சிட்டியிடம் யுனைடெட் தோற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளைய ஆட்டத் திலும் அவர் இல்லாமல் களமிறங் கும் யுனைடெட் வெற்றி பெறுவது சற்று சிரமமானதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் ஹெரேரா வுக்கு மஞ்சள் அட்டை காண் பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாளைய ஆட்டத்தில் கவனமாக விளையாட வேண்டியது அவசியம். ஏனெனில் மீண்டும் ஒரு மஞ்சள் அட்டை பெற்றால் அவருக் கும் ஓர் ஆட்டம் தடை விதிக்கப் படும். மேலும் இப்பருவத்தில் யுனை டெட்டின் புது வரவான ரொமேலு லுகாகு கடந்த 14 ஆட்டங்களில் வெறும் 2 கோல்களை மட்டுமே போட்டு உள்ளார். சிட்டிக்கு எதிரான ஆட்டத்திலும் பந்தைக் கையாள்வதில் அவர் தடுமாறினார்.