ரோகித் பேரெழுச்சி; 3வது இரட்டை சதம்

ரோகித் பேரெழுச்சி; 3வது இரட்டை சதம்

1 mins read
8816fefa-2b65-4ab1-a322-a68515308c1e
-

மொகாலி: விராத் கோஹ்லி ஓய்வில் செல்ல, தற்காலிகமாக தலைமைப் பொறுப்பேற்ற ரோகித் சர்மாவின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி முதல் வெற்றியைப் பெறும் தறுவாயில் இருந்தது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1=0 என்ற கணக்கில் இழந்தது. இருந்தாலும் மனந்தளராத அவ்வணி அடுத்து இடம்பெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரை அபார வெற்றி யுடன் தொடங்கியது.

மாறாக, முதல் ஒருநாள் போட்டியில் படுதோல்வி கண்ட இந்திய அணி எழுச்சி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தமிழகத்தின் 18 வயதே ஆன வா‌ஷிங்டன் சுந்தர் அறிமுக வீர ராகக் களமிறங்க, 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா இலங்கையை நேற்று எதிர்கொண்டது. பூவா தலையாவில் வென்ற இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா இந்திய அணியை முதலில் பந்தடிக்க அழைத்தார். அவரது இந்த முடிவு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அணித்தலைவர் ரோகித்துடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்கிய ‌ஷிகர் தவான் விரை வாக ஓட்டங்களைக் குவித்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 115 ஓட்டங்களைச் சேர்த்திருந்தபோது 68 ஓட்டங் களை எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார்.