ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவை வென்றபோதும் செல்சிக்கு வாய்ப்பு குறைவுதான்

ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவை வென்றபோதும் செல்சிக்கு வாய்ப்பு குறைவுதான்

1 mins read
1eec7e7e-7cd3-46ce-8fb4-0923b126e51b
-

லண்டன்: கடந்த வார இறுதியில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் குழு விடம் தோற்றதால் பெரும் விமர் சனங்களைச் சந்தித்த செல்சி காற்பந்துக் குழு, நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மீண்டெழுந்தது. இருந்தாலும் நடப்பு வெற்றி யாளரான செல்சி குழு இம்முறையும் பட்டியலில் முதலிடம் பிடித்து பட்டத்தைத் தக்கவைத்துக்கொள் வது என்பது இமாலய காரியம் என்கிறார் அதன் நிர்வாகி அன்டோனியோ கோன்டே.

"யதார்த்த நிலையை உணர்ந்து பேசவேண்டும். நன்றாகப் பொய் சொல்வதைவிட உண்மையைப் பேசவே விரும்புகிறேன். மான் செஸ்டர் சிட்டி குழு பட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. அதன் பயணத்தைத் தடுத்து நிறுத்துவது என்பது மிகக் கடின மான காரியம். இப்படிக் கூறுவதால் அவர்களை எட்டிப் பிடிக்க நாங்கள் முயலமாட்டோம் என்று கருதிவிடக் கூடாது," என்றார் கோன்டே. ஹடர்ஸ்ஃபீல்டுக்கு எதிரான ஆட்டத்தில் பகயாக்கோ, வில்லியன், பெட்ரோ ஆகியோர் செல்சிக்காக ஆளுக்கு ஒரு கோலை அடித்தனர்.

செல்சி குழுவின் மூன்றாவது கோலை அடிக்கும் பெட்ரோ ரோட்ரிகெஸ் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்