பெர்த்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் டேவிட் மலான்=ஜானி பேர்ஸ்டோ ஆகியோரது பொறுப்பான ஆட்டத் தால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரு ஆட்டங்களில் வென்று 2=0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று 3வது ஆட்டம் தொடங்கியது. ஆஸ்தி ரேலிய அணியில் ஹேண்ட்ஸ்கோம் பிற்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணி பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்தது. மார்க் ஸ்டோன்மனு டன் இணைந்து தொடக்க ஆட் டக்காரராகக் களமிறங்கினார் தமது 150வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அலெஸ்டர் குக்.
அணியைத் தூக்கி நிறுத்திய மலான்=பேர்ஸ்டோ
1 mins read

