புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குப் பெரிய அளவில் சம்பள உயர்வு கிடைக்க இருக் கிறது. நட்சத்திர வீரர்கள், உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஆகியோரின் சம்பளம் இரண்டு மடங்கு உயர இருக் கிறது. இதுகுறித்து இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாகக் குழு பரிசீலனை செய்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியும் பயிற்று விப்பாளர் ரவி சாஸ்திரியும் அண்மையில் கோரிக்கை விடுத் திருந்தனர். தற்போதைய நிலவரப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர வருமானத்தில் 26 விழுக்காடு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படு கிறது. அதில் 13 விழுக்காடு அனைத் துலக நிலையில் விளையாடும் வீரர்களுக்கும் 10.6 விழுக்காடு உள்ளூர் நிலையில் விளையாடும் வீரர்களுக்கும் மற்றவை பெண் களுக்கும் இளம் வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிலை விரைவில் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்திய வீரர்கள் சம்பளம் இருமடங்காகிறது
1 mins read

