விசாகப்பட்டினம்: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையி லான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1=0 என்ற கணக்கில் வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. மொகாலியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 141 ஓட்டங்கள் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்தியா=இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. மொகாலியில் நடைபெற்ற போட்டியைப் போல இந்த ஆட்டத்திலும் இந்திய அணி அதிரடியாக விளையாடி தொடரை வெல்லுமா என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்திய வீரர்கள் இரண்டாவது ஆட்டத்தில் சரியான பதிலடி கொடுத்தனர்.

