ஸ்மித் இரட்டைச் சதம்

ஸ்மித் இரட்டைச் சதம்

1 mins read
e8016d36-374c-4169-ad8e-d81c61e793cb
-

பெர்த்: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அபார பந்தடிப்பு இங்கிலாந்தைத் திக்கமுக்காட வைத்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 403 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்தி ரேலியா நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (படம்) 92 ஓட்டங்களுடனும் ஷேன் மார்ஷ் 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 138 பந்துகளில் 16 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் சதத்தைப் பதிவு செய்தார்.