ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து இளம் இலங்கை வீரர் சாதனை

ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து இளம் இலங்கை வீரர் சாதனை

1 mins read

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட் டோருக்கான முரளி குட்னஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நவீந்து பக்சரா ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இறுதி ஆட்டத்தில் ஃபோக் அகாதமி அணியும் தர்மபாலா கொட்டாவா அணியும் மோதின. முதலில் பந்தடித்த ஃபோக் அகாதமி நிர்ணயிக்கப்பட்ட 36 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் நவீந்து பக்சரா ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்தார். இந்த ஓவரில் ஒரு நோ பால் வீசப்பட்டதால் அந்தப் பந்தையும் இவர் சிக்சர் அடித்து ஒரே ஓவரில் 7 சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தர்மபாலா கொட்டாவா அணி 20.5 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.