பெர்த்: ஆஷஸ் கிரிக்கெட் தொட ரில் பெர்த் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து தோல்வியின் பிடி யில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து பந் தடிப்பைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 403 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந் தது இங்கிலாந்து. மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக் கெட்டுகளையும் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் கள். பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித் இரட்டை சதமும் மிட்செல் மார்ஷ் 150 ஓட்டங்களும் அடித் தனர். இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 3வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ஓட்டங்கள் குவித்திருந்தது.
நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் வின்ஸின் விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

