எட்ட முடியாத தூரத்தில் மான்செஸ்டர் சிட்டி

எட்ட முடியாத தூரத்தில் மான்செஸ்டர் சிட்டி

1 mins read
07c110ef-7de4-4cce-993c-7ee036a5e2f1
-

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் யாரா லும் எளிதில் எட்ட முடியாத புள்ளி கள் வித்தியாசத்தில் முன்னிலை யில் உள்ளது மான்செஸ்டர் சிட்டி. நேற்று அதிகாலை நடந்த ஆட் டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 3 கோல்கள் வித்தியாசத் தில் வீழ்த்திய சிட்டி 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. கடந்த திங்கட்கிழமை சிட்டி யிடம் தோல்வி அடைந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் யுனைடெட் விளையாடினாலும் சில்வாவின் கோல் சிட்டியை வெற்றி பெறச் செய்தது.

ஆனால் டோட்டன்ஹம் குழு விற்கு எதிரான நேற்றைய ஆட்டத் தில் சில்வா இல்லாதது சிட்டி ரசி கர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விளையாடவில்லை என்று சிட்டி குழு கூறியது. சில்வாவிற்குப் பதிலாக களம் இறங்கிய இல்கே குண்டோகன் சிட்டி குழுவிற்கான முதல் கோலை 14வது நிமிடத்தில் போட்டார். சிட்டி குழுவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற அடுத்த கோலை 70வது நிமிடத் தில் போட்டார் கெவின் டி பிரய்ன.

மான்செஸ்டர் சிட்டியின் மூன்றாவது கோலைப் போட்டார் ரஹீம் ஸ்டெர்லிங். படம்: ராய்ட்டர்ஸ்