மட்ரிட்: ரியால் மட்ரிட் குழுவின் வெற்றிப் பட்டியலில் கிளப் உலகக் கிண்ணத்தையும் சேர்த்துள்ளார் அக்குழுவின் நட்சத்திர வீரர் ரொனால்டோ (படம்). அபுதாபியில் நடைபெற்ற இக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் கிரெமியோ குழுவை 1-0 என்ற கோல்கணக்கில் வென் றது ரியால் மட்ரிட். இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக இக்கிண் ணத்தை வென்று பார்சிலோனா வின் சாதனையை சமன் செய் துள்ளது ரியால். ஆனால் இந்த வெற்றிக்காக ரியால் குழுவைக் கடுமையாகப் போராட செய்தது கிரெமியோ. எதிரணியின் தற்காப்பு அரணை உடைத்து கோல் போட முடியாமல் திணறியது ரியால். இந்நிலையில் பிற்பாதி ஆட் டத்தின்போது ரியால் மட்ரிட் குழுவிற்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் வெற்றி கோலாக் கினார் ரொனால்டோ.
ரியாலின் வெற்றிப் பட்டியலில் 'கிளப் உலகக் கிண்ணம்'
1 mins read
-

