ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

1 mins read
b2763e7d-bd2c-43df-8e38-fed6b0ce41a8
-

பெர்த்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியை வீழ்த்தி ஆஷஸ் கிண் ணத்தைக் கைப்பற்றியது ஆஸ்தி ரேலியா. மூன்றாவது டெஸ்ட் போட்டி யில் இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட் டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில், இந்த வெற்றியையும் தொடர்ந்து ஆஷஸ் தொடரை அது கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டி யின் முதல் இன்னிங்சில் இங்கி லாந்து 403 ஓட்டங்கள் குவித்தது. ஆஸ்திரேலியா 662 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ஸ்மித்தின் இரட்டை சதம் ஆஸ்திரேலிய அணிக்கு வலுவாக அமைந்தது. 259 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன் னிங்சைத் தொடங்கிய இங்கி லாந்து அணியின் ஐந்து ஆட்டக்காரர்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற் றிக்கு வித்திட்டார் ஹேசல்வுட்.

ஆஷஸ் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் கூடிக் களிக்கும் ஆஸ்திரேலிய அணியினர். படம்: ராய்ட்டர்ஸ்