எஸ் லீக்: முக்கிய மாற்றங்கள்

எஸ் லீக்: முக்கிய மாற்றங்கள்

1 mins read

சிங்கப்பூர் காற்பந்தில் இளையர் களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த எஸ் லீக் பருவத்தில் முக்கிய மாற்றங்களை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அறிவித்துள்ளது. யங் லயன்ஸ் குழுவைத் தவிர, இதர எஸ் லீக் குழுக் களில் 23 வயதுக்குட்பட்ட உள்ளூர் விளையாட்டாளர்கள் குறைந்தது ஆறு பேராவது இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், காற்பந்தில் இளையர்களை ஊக்குவிக்க முடியும் என்றார் சிங்கப்பூர் காற்பந்து சங்கத் தலைவர் லிம் கியா தோங். மேலும் போட்டியின்போது அவர்களில் மூன்று பேராவது களம் காணவேண்டும். அதுபோல் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையும் நான்கில் இருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.