போர்ன்மத்: ஆர்சனலைப் பின் னுக்குத் தள்ளிய லிவர்பூல் காற் பந்துக் குழு நிலையான ஆட் டத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று அதன் நிர்வாகி யர்கன் கிளோப் வலியுறுத்தியுள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்ட மொன்றில் போர்ன்மத் குழுவை 0=4 என வீழ்த்திய லிவர்பூல், பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. 'ஃபிரீ கிக்' வாய்ப்பைப் பயன் படுத்தி லிவர்பூலின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார் ஃபிலிப் கொட்டீனியோ. அவரைத் தொடர்ந்து டெயான் லோவ்ரன், முகம்மது சாலா, ரொபர்ட்டோ ஃபிர்மினோ ஆகியோரும் லிவர் பூலுக்கான அடுத்தடுத்த கோல் களைப் போட்டனர். இதனால் எதிரணி மண்ணில் வெற்றி பெற்ற லிவர்பூல், ஒரு புள்ளி முன்னிலையில் ஆர்ச னலைப் பின்னுக்குத் தள்ளியது. முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் சொந்த அரங்கில் எவர்ட்டன், வெஸ்ட் பிரோம் குழுக் களுக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற முடியாமல் லிவர்பூல் சமநிலை கண்டது.
லிவர்பூலின் இரண்டாவது கோலைப் போடும் டெயான் லோவ்ரன். படம்: ராய்ட்டர்ஸ்

