லண்டன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட்டில் இன் னிங்ஸ் தோல்வியடைந்ததன் மூலம் இங்கிலாந்து 3=0 எனத் தொடரை இழந்தது. கடைசி இரண்டு டெஸ்ட் களிலும் தோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆகும் அபாயம் ஏற்படுவது குறித்து இங்கிலாந்தின் முன் னாள் அணித் தலைவர் மைக்கல் வான் அச்சம் தெரி வித்துள்ளார். ஆஷஸ் தொடருக்கு முன்பு இரவு விடுதியில் ஏற்பட்ட தகராறில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வாலிபர் ஒருவரைத் தாக்கிய குற்றத்துக்காகக் கைது செய்யப் பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். பென் ஸ்டோக்ஸ் இல்லாததால் இங்கிலாந்து கடும் சரிவைச் சந்தித்துள்ளதை நேராகப் பார்க்க முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறாத செய்தியை அறிந்த மைக்கல் வான், அவர் இல்லாமல் இங்கிலாந்து அணி திணறப் போகிறது என்று அப்போது முன்னுரைத்திருந்தார்.
'பென் ஸ்டோக்சுக்குத்தான் அதிகப் பாதிப்பு'
1 mins read

