'டார்ட்ஸ்' ஜாம்பவானை வீழ்த்திய சிங்கப்பூர் வீரர்

1 mins read

லண்டன்: உலக டார்ட்ஸ் போட்டி யில் முன்னாள் உலக வெற்றியாள ரான வேல்ஸ் நாட்டின் மார்க் வெப்ஸ்டரை சிங்கப்பூரின் பால் லிம் முதல் சுற்றில் தோற்கடித் துள்ளார். இந்தப் போட்டி லண்டனில் உள்ள அலெக் சாண்டிரா பேலசில் நடைபெற்றது. 64 வயது லிம் முதல் செட்டை இழந்தார். ஆனால் அடுத்த இரண்டு செட்டுகளைக் கைப்பற்றி னார். இதை அடுத்து, நான்காவது செட்டில் வெப்ஸ்டர் வெற்றி பெற்றார். வெற்றியாளரை நிர்ண யிக்கும் கடைசி செட்டை லிம் கைப்பற்றி கொண்டாட்டத்தில் மூழ்கினார்.