கட்டாக்: இந்தியா - இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை 1=0 எனும் கணக்கில் இந்தியா வென்றது. அதுமட்டுமல்லது, ஒருநாள் தொடரை 2=1 எனும் கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்தியா = இலங்கை அணி கள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது.
டெஸ்ட், ஒருநாள் தொடரை கைப்பற்றியது போலவே டி20 தொடரையும் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது. இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை அண்மையில் கரம் பிடித்தார். இதன் காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கவில்லை. இதேபோல டி20 தொடரில் இருந்தும் அவர் ஓய்வு கேட்டுள் ளார். இதனால் ஒருநாள் தொடரைப் போலவே டி20 போட்டிக்கும் ரோகித் சர்மாவே அணித் தலைவராகச் செயல்படு வார் என்று நம்பப்படுகிறது.

