வெற்றிக் களிப்பில் எவர்ட்ட்ன்

வெற்றிக் களிப்பில் எவர்ட்ட்ன்

1 mins read
576a34cb-0aae-4595-a281-eb8f1f9013bf
-

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டம் ஒன்றில் சுவான்சியை 3-=1 எனும் கோல் கணக்கில் எவர்ட்டன் தோற்கடித்துள்ளது. தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்து வந்த எவர்ட்டன் தற்போது புதிய நிர்வாகி சேம் அலர்டைஸின் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. லீக் பட்டியலில் ஆகக் கடைசி இடத்தில் இருக்கும் சுவான்சியை நேற்று அதிகாலை வீழ்த்தியதை அடுத்து, எவர்ட்டன் லீக் பட்டியலில் ஒன்பதாவது இடத் துக்கு முன்னேறியுள்ளது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு மூலம் சுவான்சி கோல் போட்டு முன்னிலை வகித்தது. பின்னடைவு ஏற்பட்டபோதிலும் துவண்டுவிடாமல் விளையாடிய எவர்ட்டன் இடைவேளைக்குச் சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது ஆட்டத்தைச் சமன் செய்தது.

பந்தை வலை நோக்கி அனுப்பும் எவர்ட்டனின் வெயின் ரூனி (இடது). படம்: ராய்ட்டர்ஸ்