கோல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் தற்போது விளையாடி வருகிறது. டெஸ்ட், ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் டி20 தொடர் நேற்றிரவு தொடங்கியது. இலங்கையுடனான டி20 தொடர் வரும் ஞாயிறுக்கிழமை அன்று முடிகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா வில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டி களில் விளையாட இருக்கிறது. அடுத்த மாதம் 5ஆம் தேதியன்று கேப்டவுனில் இந்தியா வுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடர் எளி தானது அல்ல, சவால் நிறைந்து இருக்கும் என்று இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
'தென்னாப்பிரிக்க தொடர் சவாலானது'
1 mins read

