அரையிறுதியில் மேன்சிட்டி, ஆர்சனல்

அரையிறுதியில் மேன்சிட்டி, ஆர்சனல்

1 mins read
030911ab-cf46-4924-9820-4357f50965dc
-

லண்டன்: இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு மான்செஸ்டர் சிட்டியும் ஆர்சனலும் தகுதி பெற்றுள்ளன. காலிறுதி ஆட்டத்தில் லெஸ்டர் குழுவை பெனால்டி முறைப்படி மான்செஸ்டர் சிட்டி 4=3 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. 90 நிமிட ஆட்டம், கூடுதல் நேரம் ஆகியவை முடிந்தும் இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.

இதன் விளைவாக வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி முறை அவசியமானது. ஆட்டத்தின் 26வது நிமிடத் தில் சிட்டியின் பெர்னாடோ சில்வா கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டும் எஞ்சியிருந்த வேளையில் லெஸ்டருக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை எடுத்த ஜேமி வார்டி கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தார்.

பெனால்டியை எடுக்கும் லெஸ்டரின் ஜேமி வார்டி (வலது). படம்: ஏஎஃப்பி