புவனேஷ்வர்: இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 93 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் வாகை சூடியுள்ளது. இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி கட்டாக் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. இந்தியா முதலில் பந்தடித்தது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக் காரர்களாகக் களமிறங்கினர். ஐந்தாவது ஓவரில் மேத்யூஸ் பந்தில் ரோகித் சர்மா 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய பிரதீப், ஷ்ரேயாசை ஆட்டம் இழக்கச் செய்தார். 24 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயாஸ் வெளியேற, டோனி களமிறங்கினார்.
93 ஓட்டங்களில் வென்ற இந்தியா
1 mins read

