லண்டன்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு நடப்பு வெற்றி யாளரான மான்செஸ்டர் யுனைடெட் தகுதி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் இரண்டாவது நிலை லீக் போட்டியில் விளையாடும் பிரஸ்டல் சிட்டியிடம் யுனைடெட் 2=1 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு குழுக்களும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டன.
இந்த ஆட்டத்தை யுனைடெட் எளிதில் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யுனைடெட் வீரர்கள் தாக்குதல் நடத்தியபோதெல்லாம் பிரஸ்டல் சிட்டியின் வீரர்கள் அவர்களுக்கு அதிக நெருக்குதல் களைக் கொடுத்தனர். இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரஸ்டலின் பிராயன் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து அனுப்பிய பந்து வில்லில் இருந்து புறப்பட்டுச் சென்ற அம்பைப் போல கண்ணிமைக்கும் நேரத்தில் வலையைத் தொட்டது.
பிரஸ்டல் சிட்டி எதிர்பாராத வகையில் முன்னிலை பெற்றதைப் பார்த்து யுனைடெட் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும், யுனைடெட் விட்டுக்கொடுக் காமல் தொடர்ந்து போராடியது. இந்நிலையில், ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் யுனைடெட்டுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.
ஆட்டம் முடிய வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்தபோது பிரஸ்டலின் வெற்றி கோலைப் போட்டு மான்செஸ்டர் யுனைடெட் குழுவைப் போட்டியிலிருந்து வெளியேற்றும் கொரே ஸ்மித் (இடது). படம்: ஏஎஃப்பி

