மேன்யூவுக்கும் சிட்டிக்கும் தண்டனை இல்லை

மேன்யூவுக்கும் சிட்டிக்கும் தண்டனை இல்லை

1 mins read

லண்டன்: இம்மாதம் தொடக் கத்தில் மான்செஸ்டர் யுனை டெட்டும் மான்செஸ்டர் சிட்டியும் மோதின. இதில் சிட்டி 2=1 எனும் கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்துக்குப் பிறகு சிட்டி கொண்டாட்டத்தில் இறங் கியபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோவின் மீது பாலும் நீரும் ஊற்றப்பட்டதாக நம்பப்படு கிறது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் தண்டனை ஏதும் இல்லை என்று அறிவித்தது.