லண்டன்: பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் கோல் மழை பொழிந்து அதிர வைத்த ஆர்சனலுக்கு எதி ரான ஆட்டத்தைச் சமன் செய்து பதிலடி கொடுத்தது லிவர்பூல். நேற்று அதிகாலை நடந்த ஆட் டத்தில் லிவர்பூல் குழு தற்காப்பில் கவனக்குறைவாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி ஐந்து நிமிடங்களில் மூன்று கோல்களைப் போட்டு அரங்கை அதிர வைத்தது ஆர்சனல். ஆட்டம் தொடங்கிய 26வது நிமிடத்தில் கொட்டின்யோவின் கோலால் லிவர்பூல் முன்னிலை பெற்றது.
பிற்பாதி ஆட்டத்தில் சாலாவின் கோலால், லிவர்பூல் இரண்டு கோல் முன்னிலையுடன் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், 53வது நிமிடத் தில் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது ஆர்சனல் குழு. லிவர்பூலின் தற்காப்பு அரண் சற்று பலவீனமாக இருந்த நேரத் தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆர்சனல் அடுத்த ஐந்து நிமிடங்களில் மூன்று கோல்களைப் போட்டு முன்னோக்கி சென்றது. அலெக்சிஸ் சான்செஸ் 53வது நிமிடத்தில் தலையால் முட்டிய பந்தும் வலைக்குள் புகுந்தது.
ஆர்சனலின் மூன்றாவது கோலைப் போடும் மெசுட் ஒசில். படம்: ராய்ட்டர்ஸ்

