மட்ரிட்: லா லீகா காற்பந்துத் தொடரில் கடந்த 20 ஆட்டங்களாக தோல்வியே காணாது வீறுநடை போட்டு வந்த அட்லெட்டிகோ மட்ரிட் குழுவின் பயணத்திற்கு எஸ்பென்யால் குழு முட்டுக்கட்டை போட்டது. அட்லெட்டிகோவிற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரர் கொடுத்த பந்தை செர்ஜியோ கிரேசியா கோல் வலைக்குள் புகுத்தியதால் 1-0 என எஸ்பென்யால் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிய இரு நிமிடங்களே இருந்தபோது விழுந்த இந்தக் கோல் அட்லெட்டிகோ குழுவிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அட்லெட்டிகோவின் பயணத்தைத் தடுத்து நிறுத்தியது எஸ்பென்யால்
1 mins read

