மட்ரிட்: பார்சிலோனா காற்பந்துக் குழுவிடம் தோற்றதால் ஸ்பானிய லா லீகா பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது ரியால் மட்ரிட். முதல் பாதி ஆட்டத்தில் கரிம் பென்சிமா உதைத்த பந்து கோல் வலைக்குள் செல்லாமல் கம்பத்தை உரசிச் சென்றது. இதுதவிர கோல் போடும் இரண்டு பொன் னான வாய்ப்புகளை ரொனால்டோ தவறவிட்டுவிட்டார். இரு குழுக்களுமே முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் போடாத நிலையில், பிற்பாதி ஆட் டத்தின் 54வது நிமிடத்தில் சுவாரெஸ் முதல் கோலைப் போட 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக் கினார் மெஸ்ஸி. மாற்று ஆட்டக்காரராகக் களம் இறங்கிய விடால் காயம் பட்டதற் கான கூடுதல் நேரத்தில் இன் னோர் கோலைப் போட பார்சிலோ னாவின் எண்ணிக்கை மூன் றானது. இதற்கிடையே, ரியால் மட்ரிட் வீரர் கார்வஜஸ் பந்தைக் கையால் தொட்டதற்காக நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளி யேற்றப்பட்டார்.
பின்தங்கியது ரியால் மட்ரிட்
1 mins read

