'வாய்ப்பைத் தவறவிட்டதற்கு கிடைத்த தண்டனை'

'வாய்ப்பைத் தவறவிட்டதற்கு கிடைத்த தண்டனை'

1 mins read
2a589b82-413d-4ba5-a8b4-951f80897d76
-

லண்டன்: லெஸ்டர் குழுவிற்கு எதிரான பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் வெல்ல முடியாமல் போனது மான்செஸ்டர் யுனைடெட் டிற்கு கிடைத்த தண்டனை என்று கூறியுள்ளார் அதன் நிர்வாகி மொரின்யோ. லெஸ்டரின் முதல் கோலுக்கு பதிலாக இரண்டு கோல்களைப் போட்டார் மேன்யூவின் மாட்டா. 40வது, 60வது நிமிடத்தில் அவர் அந்த கோல்களைப் போட்டார். இதனால் 2=1 என்ற கணக்கில் மேன்யூ முன்னிலையில் இருந்தது. ஆனால், ஆண்டனி மார்சி யலும் ஜெசி லிங்கார்டும் மேன்யூ வின் முன்னிலையை வலுப்படுத் தக்கூடிய கோல் போடும் இரண்டு வாய்ப்புகளைத் தவறவிட்டது தான் பெரும் பிழையாகிவிட்டது. இதற்கிடையே லெஸ்டர் குழுவின் மாற்று ஆட்டக்காரர் ஒருவர் இரண்டு மஞ்சள் அட்டை பெற்று வெளியேறினார். வெற்றி மேன்யூவிற்குதான் என்று இருந்த நிலையில், ஆட்டத்தின் போக்கை மாற்றினார் லெஸ்டரின் மெக்குவயர்.

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் மாட்டா 'ப்ரீ கிக்' வாய்ப்பைப் பயன்படுத்தி உதைத்த பந்தை லெஸ்டரின் கோல் காப்பாளரால் தடுக்க முடியாமல் போகவே, மேன்யூவின் கோல் எண்ணிக்கை இரண்டானது. படம்: ஏஎஃப்பி