டெல்டா லீக் காற்பந்து நிறைவு

டெல்டா லீக் காற்பந்து நிறைவு

1 mins read
a5a0d652-85eb-4e0e-a8ca-b80312994f82
-

சிங்கப்பூர் போலிசும் தேசிய குற்றச்செயல் தடுப்பு மன்றமும் நேற்று முன்தினம் தேதி ஜாலான் புசார் விளையாட்டு அரங்கில் 14வது டெல்டா லீக் இறுதி காற்பந்துப் போட்டியை நடத்தின. உள்துறை, சுகாதார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். காற்பந்து விளையாட்டைப் பயன்படுத்தி இளையர்களை நல்ல வழியில் ஈடுபடுத்துவது இதன் இலக்கு. இதில் பல்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்த 118 குழுக்கள் போட்டியிட்டன. அவற்றில் மொத்தம் 2,000க்கும் அதிக விளையாட்டாளர்கள் கலந்துகொண்டனர். டெல்டா லீக் சமூக தினம் சென்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அதில் குற்றச்செயல்களைத் தடுக்கும் தூதுவர்களாக இளையர்கள் செயல்பட்டனர். டெல்டா லீக் போட்டியில் பெண்கள் சாதனை அளவாக கலந்துகொண்டனர். அவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் எட்டு பேராக இருந்தது. இந்த ஆண்டில் ஆக அதிகமாக 16 பேராக உயர்ந்தது. சிங்கப்பூரின் நிபுணத்துவக் காற்பந்து விளையாட்டாளர் களும் டெல்டா லீக்கில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அடுத்த டெல்டா லீக் போட்டி 2018 ஜூன் பள்ளி விடுமுறை நாட்களின்போது நடக்கும் என்று போலிஸ் தெரிவித்தது.

காற்பந்து விளையாட்டு வீரர் இர்ஃபான் ஃபாண்டியுடன் டெல்டா லீக் விளையாட்டு வீராங்கனை. படம்: சிங்கப்பூர் போலிஸ்