நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முத லிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி குழுவும் 'ரெலிகேஷன்' நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்தில் உள்ள நியூகாசலும் இன்று மோது கின்றன. நடப்பு பருவத்தில் முன்னணி குழுக்களிடம் தோற்ற நியூகாசல், கடைசியாக தனது சொந்த மண் ணில் வெஸ்ட் ஹேம் குழுவை 3=2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மாறாக, 17 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துவரும் சிட்டி, கடைசியாக சாம்பியன்ஸ் லீக்கில் ஷக்தர் டோனட்ஸ்க் குழுவிடம் 1-2 எனத் தோற்றது.
கடந்த 19ஆம் தேதி நடந்த லீக் கிண்ணப் போட்டியில் லெஸ்டரிடம் சிட்டி சமநிலை கண்டது. சிட்டியின் வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்துவது அவ்வளவு எளிதான செயலல்ல என்பதை உணர்ந்திருந்தாலும் மேலும் பின் னடைவைச் சந்திக்கக்கூடாது என்பதால் இன்றைய போட்டியில் நியூகாசல் கடுமையாகப் போராடும். கடந்த ஏப்ரலில் இதே அரங்கில் இக்குழுக்கள் மோதிய ஆட்டம் 1=1 என சமநிலையானது. இதன் மூலம் சிட்டியிடம் 16 லீக் ஆட்டங் களில் அடைந்து வந்த தோல்விக்கு நியூகாசல் முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், இன்றைய போட்டி யில் சிட்டியின் தாக்குதல் ஆட் டத்திற்கு நியூகாசலின் தற்காப்பு வரிசை தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

