மெல்பர்ன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக் கெட் தொடரின் நான்காவது போட்டியில் டேவிட் வார்னர் விளாசிய சதத்தால் ஆஸ்திரேலியா நல்ல நிலையில் உள்ளது. ஏற்கெனவே 3=0 எனத் தொடரை வென்று முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா நான்காவது போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பூவா தலையா வென்ற ஆஸ் திரேலிய அணித் தலைவர் ஸ்மித் பந்தடிப்பைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க்கிற்குப் பதிலாக ஜாக்சன் பேர்டும் இங்கிலாந்து அணியில் ஓவர்ட்டனுக்குப் பதிலாக டாம் குர்ரனும் இடம்பிடித்தனர். ஆஸ்திரேலிய அணியின் பேன்கிராஃப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பேன்கிராஃப்ட் நிதானமாக விளையாட, வார்னர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். வார்னர் 64 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
தனது 70வது டெஸ்ட் போட்டியில் 21வது சதத்தைப் பதிவு செய்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (இடது) 103 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். படம்: ஏஎஃப்பி

