குக் இரட்டை சதம்; இங்கிலாந்து முன்னிலை

குக் இரட்டை சதம்; இங்கிலாந்து முன்னிலை

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 327 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் டுக்கு 192 ஓட்டங்கள் எடுத்திருந் தது. அலைஸ்டர் குக் (104), ரூட் (49) களத்தில் இருந்தனர். நேற்று நடந்த மூன்றாவது நாள் ஆட்டத்தில் அரை சதம் கடந்த ரூட் 61 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

நேதன் லயனின் சுழலில் சிக்கிய பேரிஸ்டோவ், மொயீன் அலி இருவரும் குறைந்த ஓட்டங் களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் குக் மட்டும் தனது நிதான ஆட்டத்தால் டெஸ்ட் போட்டியில் 5வது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன் னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப் பிற்கு 491 ஓட்டங்கள் எடுத்து, 164 ஓட்டங்கள் முன்னிலை வகித் தது. 244 ஓட்டங்களுடன் குக் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.