மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி: 'மிகவும் கடினம்'

மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி: 'மிகவும் கடினம்'

1 mins read

நியூகாசல்: தற்காப்பு ஆட்டத்தில் மிதமிஞ்சிய கவனம் செலுத்தும் குழுக்களுக்கு எதிராக விளை யாடுவது கடினமான ஒன்று என் கிறார் மான்செஸ்டர் சிட்டியின் நிர்வாகி கார்டியோலா. இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட் டத்தில் நியூகாசலை 1-0 என்ற கோல் கணக்கில் சிட்டி வீழ்த்திய பிறகு பேசிய அவர் இவ்வாறு கூறினார். நியூகாசலின் சொந்த மண் ணில் நடந்த ஆட்டத்தில் முக்கால் வாசி நேரம் பந்து, சிட்டி குழுவிடம் இருந்தாலும் எதிரணியின் தற்காப்பு அரணை உடைத்து கோல் போட அக்குழு திணறியது. ஆட்டம் தொடங்கியதும் நியூ காசல் வீரர் உதைத்த பந்தை லாவகமாக தடுத்துவிட்டார் சிட்டி யின் கோல் காப்பாளர் எடிர்சன். அதன் பிறகு அரை மணி நேரம் வரை கோல் போடும் முயற் சியில் இறங்கவில்லை நியூகாசல். இதற்கிடையே, செர்ஜியோ அகுவேரோவின் இரண்டு கோல் போடும் முயற்சிகளும் சிட்டிக்கு கைகொடுக்கவில்லை.